'இயக்குநர் சிகரம்' அறிமுகம் செய்த 'சின்ன கலைவாணர்' விவேக் - நடிகர் தாமு - நடிகர் தாமு பேச்சு
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் தாமு, நல்ல சிந்தனைகளை மக்களிடம் சேர்த்த பெருமை விவேக் அவரையே சேரும். அப்துல் கலாமின் ஆணைக்கிணங்க மரம் நடும் பணியை செய்தவர் விவேக். இனி அவரது நண்பர்கள் மூலமாக செய்வார். விவேக் உயிருடன் உள்ளார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சாட்சி. மரக்கன்று ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலை. இது மரமாக வேண்டும், இதனை மரமாக்க பாதுகாக்க வேண்டும். இதற்காக நட்டமரம் பாதுகாப்பு விழா நடத்தினோம். தமிழ்நாடு முழுவதும் இந்த விழா நடத்தப்பட்டது. விதைப்பந்து திட்டத்தில் நிறைய ஆலோசனை விவேக் எங்களுக்கு அளித்தார் என்றார்.