கபில் தேவின் சாதனை அளப்பெரியது - ரன்வீர் சிங் - 83 ஃபர்ஸ்ட் லுக் வெளியிடு
1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 83 படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கபில்தேவாக நடிக்கும் ரன்வீர் சிங் பேசுகையில், "83 உலகக்கோப்பையை வென்றது இந்திய சரித்திரத்தின் பெருமைமிகு தருணம். அந்த தருணத்தை நாங்கள் திரையில் கொண்டுவரவுள்ளோம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று உங்கள் முன் வெளியிடுவதில் மகிழ்ச்சி. கபில்தேவ் ஒரு முறை கூட போல்டானதில்லை அவரது சாதனைகள் அளப்பரியது. அவர் கதாபாத்திரம் செய்ய அனுமதி தந்ததற்கு நன்றி. 83 அணி இன்றும் நட்பாக இருக்கிறார்கள். அந்த நட்புக்குழு மனப்பான்மைதான் வெற்றியைப் பெற்றுத்தந்தது. நானும் இப்படத்தில் பணிபுரிவதில் நிறைய நட்பை சம்பாதித்திருக்கிறேன். இப்படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும், நன்றி" என்றார்.