பிரதமர் இந்திராகாந்தி முன் கலகலப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீகாந்த் - கபில் தேவ் - 83 படம் வெளியாகும் தேதி
"ஸ்ரீகாந்த் அப்போது விளையாடியபோது எப்போதும் உற்சாகமாக பரபரப்பாக இருப்பார். பிரதமர் இந்திராகாந்தி வந்தபோது எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தினேன் அப்போது ஸ்ரீகாந்தை அறிமுகப்படுத்தியபோது விரைப்பாக நின்றார். ஆனால் முப்பதாவது நொடியில் மீண்டும் கலகலப்பை ஆரம்பித்துவிட்டார்" என 83 திரைப்பட முதல் பார்வை வெளியீடு நிகழ்ச்சியில் கபில் தேவ் கடந்தகால பசுமையான நினைவுகளை அசைபோட்டார்.