கோடை வெயில்: அபயாம்பாள் யானைக்கு மின்விசிறி போட்டதால் குதூகலம்! - மின்விசிறி வனவிலங்கு ஆர்வலர்
மயிலாடுதுறை: பழமையும், பிரசித்தியும் வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 60 வயதுடைய அபயாம்பாள் என்கிற யானை கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் யானையின் அவதி குறித்து சிந்தித்த வனவிலங்கு ஆர்வலரும் நட்சத்திரா குழுமத் தலைவருமான ஆடிட்டர் குரு. சம்பத்குமார் என்பவர், யானை கொட்டகையில் இரண்டு மின்விசிறிகள் அமைத்து தந்துள்ளார். கொட்டகையில் காற்று வீசுவதால் யானை அபயாம்பாள் குதூகலமடைந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST