பொரசக்குறிச்சிக்கு கூடுதல் அரசுப் பேருந்து இயக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல் - school student saalai mariyal in Porasakurichi village
கொளவாய், கீழ்ஒரத்தூர், அசகளத்தூர், ஈயனூர், ஒகையூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு காலை எட்டு மணிக்கே கொளவாயிலிருந்து புறப்படும் 12 A என்ற அரசு பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்காக கள்ளக்குறிச்சிக்கு இப்பேருந்தில் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அரசு பேருந்தானது கொளவாயிலிருந்து புறப்பட்டு பொரசக்குறிச்சி கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி விருகாவூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலால் 2 பள்ளி மாணவர்கள் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று வழக்கம்போல் வந்த அரசு பேருந்தைச் சிறைப்பிடித்துக் கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமெனப் பள்ளி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST