19 நாட்களில் ரூ. 1.40 கோடி காணிக்கை! - சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
திருச்சி: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி காணிக்கை செலுத்துவர். அந்த வகையில் கோயில் உண்டியல் காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் இன்று எண்ணினர். அதில், கடந்த 19 நாட்களில் ரூ. 1 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 916 ரொக்கப் பணம், 3 கிலோ 786 கிராம் தங்கம், 5 கிலோ 315 கிராம் வெள்ளி, 97 அயல்நாட்டு பணம் ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST