அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் எங்களது பங்கு இருக்கும் - சு. வெங்கடேசன் எம்.பி.
மதுரையின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வான சித்திரைத் திருவிழா நாளை மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மக்கள் பங்கேற்போடு சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்றார். பின்னர், பேசிய அவர், “அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கும் இருக்கும். இதில் எந்தவித அரசியலுக்கும் இடமில்லை” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST