Maha Shivaratri: கோமுக்தீஸ்வரர் கோயிலில் ருத்ர நாட்டியாஞ்சலி - மகா சிவராத்திரி
மயிலாடுதுறை: திருவாவடுதுறையில், பிரசித்தி பெற்ற கோமுக்தீஸ்வரர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, அபிநயா நுண்கலை பயிற்சியகம் சார்பில் ருத்ர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூரு, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 நாட்டிய குழுவினர் கலந்துகொண்டு பரத நாட்டியம் ஆடினர். இந்நிகழ்ச்சியை பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST