தண்ணீர் தண்ணீர்... பொதுமக்கள் மறியல்... - திருச்சி செய்திகள்
திருச்சி: துறையூர் அருகே கண்ணனூர் பாளையத்தில் கடந்த ஆறு மாதங்களாக காவிரி நீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை என சாலையில் காலி குடங்களுடன் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST