ஆம்பூரில் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு - தேர்தல் தற்காலிக நிறுத்தம் - ஆம்பூர் திமுகவினரிடையே தகராறு
திருப்பத்தூர்: திமுக சார்பில் போட்டியிட்டு 19ஆவது வார்டில் வெற்றிபெற்ற ஷபீர் அகமது என்பவர் தலைவர் பதவியிற்குப் போட்டியிட மனு தாக்கல் செய்த நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், ஆம்பூர் நகர மன்றத்தலைவர் வேட்பாளர் ஏஜாஸ் அகமது தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக்கூறி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஏஜாஸ் அகமது, மற்றும் ஷபீர் அகமது ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST