தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கடலூர்: சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி - விஜய் ரசிகர்கள்

By

Published : Apr 7, 2022, 10:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

கடலூர் பாரதி சாலையிலுள்ள நியூ சினிமா திரையரங்கில் ரசிகர் மன்றத்தின் சார்பாக ‘பீஸ்ட்’ திரைப்படத்தை காண்பதற்கு தனி காட்சித் தர வேண்டும் என்றும் அதற்கான டிக்கெட்டை தாங்களே விற்று விடுவதாகவும் கூறியுள்ளனர். இதற்கு நிர்வாகத்தினர் அனுமதி தராததால், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியூ சினிமா திரையரங்கு வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து அவர்களை கலைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details