நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கைது ஆவதற்குக்காரணமான காணொலி - ஹிஜாப்
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில், மாணவிகள், மதம் சார்ந்த உடை அணிந்து வருவது பற்றிக் கருத்து வேறுபாடுகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டன. இதுகுறித்த பல்வேறு தரப்பினர் நீதிமன்றங்களை நாடினர். இந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் சார்பாக, கடந்த மார்ச் 17அன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நபர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விபத்தில் சிக்கி கொலை செய்யப்படுவார், என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமான அவரது பேச்சு குறித்த காணொலி..!
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST