Video: சேலம் மாரியம்மன் கோயில் திருவிழா - பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்! - Performing the funeral rites while still alive paying a strange tribute to the temple
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி(55). இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அம்மை நோய் வந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அது குணமாகும்போது, மாரியம்மன் கோயிலுக்கு, தனக்கு இறுதிச்சடங்கு செய்து பாடைக் கட்டுவதாக வேண்டியிருந்தார். அதன்படி, இன்று (ஏப்.9) கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயிலில் ஜெயமணி, தன்னை பிணம் போல் அலங்கரித்து பாடையில் படுத்தபடி ஊர்வலமாக சுடுகாடுவரை சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். இந்த விநோத நேர்த்திக்கடன் செலுத்தப்படும் வீடியோ, தற்போது சேலத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST