தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்! - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

By

Published : Feb 20, 2022, 11:27 AM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று (பிப். 20) காலை பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details