பெட்ரோல் பங்கில் பரிதாபம்: சண்டையை தடுத்தவர் பலி - சிசிடிவி காட்சி - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று (மார்ச் 7) இரவு மணீஷ்ராஜா என்பவர் பெட்ரோல் போட வந்தபோது, அங்கிருந்த ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், தனது தந்தையான பாலசுப்பிரமணியத்தையும் வரவைத்து ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த மற்றொரு வாடிக்கையாளரான கலைச்செல்வன் தகாராறை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், கலைச்செல்வன் பாலசுப்பிரணியத்தை தாக்குவதாக நினைத்து பாலசுப்பிரமணியத்துடன் வந்த ஆட்டோகுமார், சிவா இருவரும் திருப்பி கலைச்செல்வனை தாக்க, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அசையாமல் இருந்த கலைச்செல்வனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பாலசுப்பிரமணியன், ஆட்டோகுமார், சிவா ஆகிய மூவரையும் பணங்குடி காவல் துறையினர் கைது செய்தனர். மணீஷ்ராஜா தப்பி ஓடிவிட்ட நிலையில், பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST