சிங்கத்தை சீண்டியதால் துண்டாய் போன விரல் - LION
ஜமைக்காவில் செயின்ட் எலிசபெத் என்னுமிடத்தில் உள்ள ஜமைக்கா உயிரியல் பூங்காவில் காப்பாளர் ஒருவரின் விரலை சிங்கம் ஒன்று கடித்து துண்டாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிங்கத்தை கிண்டல் செய்து, அதைத் தூண்டி கூண்டுக்குள் விரல்களை விட்டு விளையாடுகிறார். அப்பொழுது உறுமிக்கொண்டிருந்த சிங்கம் திடீரென அவரின் விரலைக் கடிக்கிறது. காப்பாளர் விரலை எடுக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் விடாமல் சிங்கம் அவரது விரலை பிடித்துக்கொண்டது. பின் ஒரு கட்டத்தில் அவரது விரல் துண்டாகி கீழே விழுகிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST