தமிழ்நாடு

tamil nadu

உள்ளூர் தயாரிப்பு உடைகளை அணிந்து ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

ETV Bharat / videos

புதுச்சேரியில் நடைபெற்ற பேஷன் ஷோ... உள்ளூர் தயாரிப்பு உடைகளை அணிந்து கலக்கிய இளைஞர்கள்! - Etvbharat tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 7:55 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளிநாட்டவரின் முயற்சியால் நவீன காலத்திற்கு ஏற்ப விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை அறிமுகப்படுத்தும் விதமாக புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள காசாபிளாங்கா (Casablanca) வணிக வளாகத்தில் நடைபெற்ற பேஷன் ஷோவில், (Fashion Show) 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களும், இளைஞர்களும் ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து கொண்டு ஸ்டைலாக நடந்து வந்தனர்.

இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஆரோவில் பகுதியில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளிநாட்டவரின் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை காசாபிளாங்கா உரிமையாளர் கபூர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டது என்றும், இதில் ஆண்களும் பெண்களும் உள்ளூர் தயாரிப்பு உடைகளை அணிந்து கொண்டு ஆர்வத்துடன், தங்களது திறனை வெளிப்படுத்தினார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details