Video: ராக்கெட்டை வாயில் கவ்விக்கொண்டு கொளுத்திய இளைஞர்! - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
வல்சாத் (குஜராத்): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-க்காக இளைஞர் ஒருவர் தீபாவளி ராக்கெட்டை வாயில் கவ்விக்கொண்டு தெருவில் ஓடுவது போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் வாயில் தீபாவளி ராக்கெட்டை கவ்விப் பிடித்துக்கொண்டார். மற்றொருவர் அந்த இளைஞரின் வாயில் வைத்திருக்கும் ராக்கெட்டை பற்ற வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உயிரை பணயம் வைத்து சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய வேண்டும் என்ற இளைஞரின் நோக்கத்தை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். வீடியோவின் நம்பகத்தன்மையை ETV Bharat உறுதிப்படுத்தவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST