Video:பட்டாசுகளுடன் அலப்பறை செய்த இளைஞர் கைது - பட்டாசுகளுடன் அலப்பறை செய்த இளைஞர்
பெங்களூரு(கர்நாடகா): உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் காரில் இருந்தபடியே, சாலைகளில் பட்டாசுகளை வெடித்துச் சென்ற இளைஞரை போலீசாரால் கைது செய்தனர். விஷால் கோலி என்ற அந்த இளைஞர் கடந்த அக்.26 ஆம் தேதி அப்பகுதியில் காரில் சென்றபோது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாசுகளை கொளுத்திய படி பயணம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இவரை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அக்.29 அவரை போலீசார் கைது செய்த நிலையில் அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST