கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி - மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு - 75 நாட்கள் யோகா நிகழ்ச்சி
நாடு சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டை முன்னிட்டு 75 நாட்கள் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. . அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், மத்திய கலாச்சார மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற யோகா நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிஷன் பிரசாத் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST