குடியரசுத்தலைவர் தேர்தலில் யஸ்வந்த் சின்ஹா நிச்சயம் வெற்றிபெறுவார் - திருச்சி சிவா - திருச்சி சிவா
திருவள்ளூர்: திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி குறித்து இளைஞரணி சார்பில் பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்புச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் திருச்சி சிவா செய்தியாளரிடம் பேசுகையில், 'நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹா நிச்சயம் வெற்றி பெறுவார். வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் என்றும் சொல்லலாம். தற்போது ஜனநாயகம் கேள்விக்குறி ஆகிவிட்டது. அதிகாரம் கையில் இருக்கும் நிலையில் நினைத்ததை பாஜக செய்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்திற்குகூட பிரதமர் மோடி சரிவர வருவதில்லை. மேலும் நமது இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மிகவும் புனிதமானதாகவும் தற்போது அதன் மாண்பு மங்கி வருவதாகவும், தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST