World Cat Day: உலக பூனைகள் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய பூனை ஆர்வலர்கள்! - பூனைகள் தினம் தேதி
ஈரோடு: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் செல்லப்பிராணிகளில் ஒன்றாகப் பூனை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பூனை வளர்க்கும் உரிமையாளர்களுக்கும், பூனை விரும்பிகளுக்கும் பூனையின் நலன் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் கடந்த 2022 ஆண்டு விலங்குகள் நலன் சர்வதேச நிதியத்தால் (IFAW) இந்த தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக பூனை தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பெர்ஷியன் நாட்டுப் பூனை வளர்ப்பவர்கள் தங்களது செல்லப்பிரணிக்கு கேக் வெட்டி கொண்டாடினர்.
அதைத் தொடர்ந்து பேசிய ஹுரைரா பூனை ஆர்வலர்கள் செயலாளர் முஸ்தஃபா கூறியது, "பூனை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த உலக பூனை தினம் கொண்டாடப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்த வகையான இனப்பூனை வளர்ப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அக்.22 ஆம் தேதி சர்வதேச பூனை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும்" தெரிவித்தார். தற்போது ஈரோட்டில் முதல்முதலாக பூனை தினம் கொண்டாடப்பட்டது பூனை வளர்ப்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.