பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர்கள்! - Demonstration for protection of women
இந்தியாவில் உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பெண் வழக்கறிஞர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களை ஆந்திர காவல் துறையினர் கைது செய்து பாலியல் வன்புணர்வு கொடுக்க முயற்சித்ததைக் கண்டித்தும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீதிமன்றம் புறக்கணிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.