மனு அளிக்க வந்த பெண் திடீரென சாமி ஆடிய வீடியோ! - ramanathapuram sp office
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் தன்னுடைய இடத்தை சகோதரர் கேட்டு மிரட்டி வருவதாக கூறி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க கணவன் மற்றும் மகனுடன் சென்றிருந்தார். காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்த சாந்தி திடீரென எழுந்து குலவையிட்டு சாமி ஆடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பெண் காவலர்கள் அவரை பிடித்து அமர வைத்தனர். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST