ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்..! நொடிப்பொழுதில் உயிரை காத்த காவலர்! வீடியோ வைரல்! - Woman Falling Off Train in coimbatore
Published : Sep 16, 2023, 1:29 PM IST
கோயம்புத்தூர்:ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி தவறி விழுந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் துரிதமாக செயல்பட்டு பெண்ணை பத்திரமாக காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (செப். 15) சென்னை செல்லும் ரயில் புறப்பட்டது. கோவையில் இருந்து ரயில் கிளம்பிய நிலையில், இரு பெண்கள் அந்த ரயிலில் ஏற முயற்சி செய்தனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது தவறுதலாக ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.
மேலும், ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில், அதில் இருந்து தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு, நடைமேடைக்கு இழுத்து அவரை காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதனைத் தொடர்ந்து, பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்க கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.