தமிழ்நாடு

tamil nadu

மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் இளம்பெண் உயிரிழப்பு.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

ETV Bharat / videos

மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் இளம்பெண் உயிரிழப்பு.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் - Nellai news

By

Published : May 10, 2023, 11:26 AM IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் ரம்யா (25). இவர் தனது அண்ணி பிலோமீனா மற்றும் அண்ணியின் மகள் ஹென்சி ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் பின்னால் வந்த மினி பஸ், அவர்களின் இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. 

அப்போது எதிர்பாராத விதமாக ரம்யா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரம்யா மீது மினி பஸ்ஸின் பின் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது. தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ஆனால், செல்லும் வழியிலேயே ரம்யா உயிரிழந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் நடந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

மேலும், அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான மினி பஸ்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் இயங்குவதாகவும், இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details