தேனி வனப்பகுதியில் காட்டுத்தீ - தீக்கிரையான மூலிகைச் செடிகள்..! - வன உயிரினங்கள்
தேனி:பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று (பிப்.15) இரவு முதல் சிறிய அளவில் பற்றிய காட்டுத் தீயானது, காற்றின் வேகம் அதிகரிப்பினால் மளமளவென பரவி பெரிய அளவில் தொடங்கி தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத் தீயானது 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான இடங்களில் பரவியதால், இந்தப் பகுதியில் இருந்த விலை உயர்ந்த மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் இருந்து சேதம் அடைந்து வருகின்றன. மேலும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் சிறிய வகை வன உயிரினங்கள், தீயில் கருகி பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.