குன்னூர், மேட்டுபாளையத்தில் உலா யானைகள் - சுற்றுலா பயணிகள் ஜாக்கிரதை!
நீலகிரி: சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலிருந்து உணவு மற்றும் குடிநீருக்காக குன்னூர் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக உலா வந்த 7 காட்டு யானைகள் தற்போது பர்லியார் பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் குடியிருப்புகளுக்கு அருகில் வருவதைத் தடுக்க கண்காணிப்பு பணியில் 10 வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக வனச்சரகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். மேலும் யானைகள் அவ்வப்போது சாலைகளைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டு யானைகள் அச்சுறுத்தலால் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல அச்சமடைந்து உள்ளனர். காட்டு யானைகள் தோட்ட பகுதியில் உலா வருவதுடன், தோட்டப் பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் விரட்டப் பொதுமக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை திடீர் மரணம் - வனத்துறை விளக்கம் என்ன?