Video: கோவை வால்பாறையில் வலம் காட்டு யானைகள் கூட்டம்! - தேயிலைத் தோட்ட தொழிலாளர்
கோவை:வால்பாறை அடுத்த குரங்குமுடி பகுதியில் உள்ள வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீர் நிலைகளைத் தேடி நேற்று முதல் (பிப்.18) வரத் தொடங்கியுள்ளன. மேலும், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாணாம்பள்ளி வனச்சரகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஒவ்வொரு குழுக்களிலும் 20-க்கும் மேற்பட்ட யானைகள் உலா வருகின்றன.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வால்பாறை பகுதியில் இருக்கும். பின்னர் கேரளா பகுதிக்குச் செல்வது வழக்கம். யானைகளுக்கு உணவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு சத்துணவுக்கூடம், நியாய விலை கடைகளை உடைக்க நேரிடுகிறது. எனவே, வனத்துறையினர் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.