Video: சத்தியமங்கலம் - மைசூர் நெடுஞ்சாலையில் சண்டையிட்ட காட்டு யானைகள்! - Sathyamangalam Wildlife Sanctuary
ஈரோடு:ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இன்று அதிகாலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் சாலையின் நடுவே சென்று செல்லமாக தங்களின் தும்பிக்கையால் சண்டையிட்டபடி நின்றன. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தினர்.யானைகள் செல்லமாகச் சண்டையிடும் காட்சியை அனைவரும் ரசித்தனர்.
பின்னர், சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பல யானைகள் வனப்பகுதியை விட்டு அடிக்கடி நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் எனக் கூறப்படுகிறது.வலைத்தளங்களில் இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.