வீடியோ: சாலையில் சண்டை போட்ட காட்டு யானைகள்
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உணவு மற்றும் குடிநீருக்காக ஊருக்குள் புகுந்துவருகிறது. அந்த வகையில், கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த சுள்ளிக்கொம்பன் என்கிற காட்டுயானை ஆழியார் - வால்பாறை சாலையில் தொடர்ந்து அட்டகாசங்களை செய்து வருகிறது.
நேற்றிரவு ஆழியார் - வால்பாறை சாலையில் மற்றொரு காட்டு யானையுடன் சுள்ளிக்கொம்பனுக்கு சண்டை ஏற்பட்டது. இதனால் ஆழியார் - பொள்ளாச்சி சாலையில் வந்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகினர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. வனவிலங்குகளை கண்காணிக்க சுழற்சி முறையில் வன அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வளைதங்களில் வைரலாகி வருகிறது.