கால்நடை பண்ணைக்குள் புகுந்த காட்டு யானைகள்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கால்நடை பண்ணைக்குள் புகுந்த காட்டு யானைகள்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு! - ஓசூர்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணைக்குள் நேற்று 7 காட்டு யானைகள் புகுந்துள்ளன. கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் கிராமங்கள் வழியாக இடம்பெயர்ந்து, இந்த கால்நடை பண்ணைக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. பண்ணைக்குள் தஞ்சமடைந்த காட்டு யானைகளை வனத்துறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST