பலாப்பழத்தை ருசிக்க முகாமிடும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் கவனம்! - காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை பலாப்பழ சீசன் இருப்பது வழக்கமான ஒன்று. இதனால் பலாப்பழ சீசன் காலங்களில் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் போன்ற பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையிலும், ரயில் பாதையிலும் நடமாடி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது 3 காட்டு யானைகள் பலாப்பழத்தை ருசிக்க குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் வருவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை கண்காணிக்க பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இரவு பகலாக பர்லியார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காட்டு யானை உலா வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Delhi Floods: டெல்லியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மகாத்மா காந்தி நினைவிடம்!