தமிழ்நாடு

tamil nadu

பேரணாம்பட்டு நீர் தேக்கு பள்ளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானை

ETV Bharat / videos

அடடா மழைடா அடமழைடா! நீர் தேக்கு பள்ளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானை.. வீடியோ வைரல்! - wild elephant bathing in Peranampatu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 7:50 AM IST

வேலூர்: பேரணாம்பட்டு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காப்புக்காட்டில் நீர் தேக்கு பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில், காட்டு யானை ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்புகாட்டில், வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக வனத்துறையினரால், பல இடங்களில் நீர்த்தேக்கு பள்ளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட நீர் தேக்கு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

இதனால், அங்கு வரும் வனவிலங்குகள் தேங்கியுள்ள தண்ணீரை குடித்துவிட்டு செல்கின்றனர். அதனைத்தொடர்ந்து, தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட நீர் தேக்கு பள்ளமானது மழையால் நிரம்பியுள்ளதால் அவற்றில் காட்டு யானைகள் உற்சாக குளியல் போடுகின்றன. இந்நிலையில் நீர் தேக்கு பள்ளத்தில் காட்டு யானை குளித்து மகிழும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. காப்புக்காட்டு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details