தமிழ்நாடு

tamil nadu

நடுரோட்டில் சண்டையிடும் காட்டுப்பன்றிகள்

ETV Bharat / videos

நடுரோட்டில் சண்டையிட்ட காட்டுப் பன்றிகள்.. வைரலாகும் வீடியோ காட்சி.! - wild boars fighting in road

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 10:59 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள், தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிகின்றன.

அதனைத் தொடர்ந்து, திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் சாதாரணமாக சாலைகளில் நடமாடுகின்ற நிலை உள்ளது.

இந்நிலையில், நேற்று (அக்.14) இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுப் பன்றிகள் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நடமாடியது. பின்னர், இரண்டு காட்டுப் பன்றிகளும் சண்டையிட்டுக் கொண்டது.

காட்டுப்பன்றிகளின் சண்டை காரணமாக, சோதனைச் சாவடி பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில், அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவர் காட்டுப் பன்றிகளின் சண்டைக் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details