சத்தீஸ்கரில் தென்பட்ட வெள்ளை கரடி - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி - சத்தீஸ்கர்
சத்தீஸ்கர்: மார்வாஹி மாவட்டத்திலுள்ள வனப்பிரிவுக்குட்பட்ட மடகோட் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு வெள்ளை கரடி தென்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதில், கறுப்பு கரடியும், வெள்ளை கரடியும் ஒன்றாக நடந்து செல்கின்றது. முன்னதாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று, மார்வாஹியின் ஆண்டி கிராமத்தில் ஒரு கிணற்றில் விழுந்து வெள்ளை கரடி இறந்தது. மீண்டும் ஒருமுறை வெள்ளை கரடியை பார்த்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST