நந்தி வாயிலிருந்து கொட்டும் நீர்! குவியும் மக்கள்! எங்க தெரியுமா?
Published : Sep 27, 2023, 12:20 PM IST
திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர், நந்தி வாயில் இருந்து கொட்டுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மலையில் உள்ள நந்தி சிலையின் வாயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் காட்சி பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பல அருவிகள் காணப்படும் நிலையில், நந்தி வாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவது காண உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் திரள்கின்றனர்.
இதையும் படிங்க:Sathanur Dam : வேகமாக நிரம்பும் சாத்தனூர் அணை! தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!