சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை! - சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வர். குடும்பத்தோடு வந்து அருவியில் குளித்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்வர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST