கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால், நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் வீழ்ச்சிகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியின் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST