Hogenakkal: காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கல் அருவியில் ஆனந்த குளியல் போடும் மக்கள்!
தருமபுரி: பென்னாகரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று நீர்வரத்து திடீரென 4,500 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (ஜூன் 2) ஒகேனக்கல் சுற்றுப்புறப் பகுதி மற்றும் காவிரி ஆற்றங்கரை பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒகேனக்கலில் நீர்வரத்து 1,500 கன அடியாக இருந்தது. ஆனால், இன்று ( ஜூன் 4) 3 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் குளித்தும் பரிசலில் பயணம் மேற்கொண்டும் சுற்றுலாவை இனிமையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இனி ‘ஜில்’தான்.. தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு