Video: காவலர்கள், வனத்துறையினரை சீறிப்பாய்ந்து தாக்கிய சிறுத்தை! - ஹரியானா மாநிலம் பானிபட்
ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் காவல்துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற அவர்கள், சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுத்தை காவலர்கள், வனத்துறையினரை சீறிப்பாய்ந்து தாக்கியது. பின்னர், அந்த சிறுத்தையைப் பிடித்து கூண்டில் அடைத்தனர். இந்த வீடியோவை பானிபட் எஸ்பி ஷஷாங்க் குமார் சவான், சமூக வலைதளத்தில் பகிர்ந்து காவலர்கள், வனத்துறையினரின் துணிச்சலை பாராட்டி உள்ளார். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாரும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST