அப்பாக்கள் முக்கியத்துவத்தை கூறும் படமாக விருமன் இருக்கும் - நடிகர் கார்த்தி
அப்பாக்கள் முக்கியத்துவத்தை கூறும் படமாக விருமன் திரைப்படம் இருக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருமன் பட செய்தியாளர் சந்திப்பில், பருத்திவீரன் சாயல் விருமன் படத்தில் வரக்கூடாது என முயற்சி செய்ததாக கூறினார். சூரி ஓவ்வொரு காட்சியிலும் நகைச்சுவையை மெருகேற்றி கொண்டே இருப்பார் என்றும், தேனி படப்பிடிப்பின் போது பராமரிப்பின்றி இருந்த பள்ளியை அகரம் தொண்டு நிறுவனம் மற்றும் சில தன்னார்வலர்கள் மூலம் சீரமைத்ததாகவும் அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST