Viral Video: சென்னை புறநகர் ரயிலில் இளைஞர்கள் அட்டகாசம்.. பயணிகளை அச்சுறுத்திவிட்டு தப்பி ஓட்டம்! - ரயில் பயணிகளை அச்சுறுத்திய இளைஞர்கள்
சென்னை: வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை செல்லும் பறக்கும் மின்சார ரயிலானது நேற்று (ஜூலை 02) வேளச்சேரியில் இருந்து கிளம்பி சென்று கொண்டிருந்தது. அப்போது வேளச்சேரியில் ரயிலில் கூட்டமாக ஏறிய சில இளைஞர்கள், பறக்கும் மின்சார ரயிலின் பக்கவாட்டு ஜன்னலில் காலை ஊன்றியபடி சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செயல் ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்ததால், உடனே இளைஞர்களின் இத்தகைய செயலை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். அப்போது, பயணியின் செல்போனை அந்த இளைஞர் பறிக்க முயன்று அவரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ரயில் பயணிகளை மிரட்டி அச்சத்தை ஏற்படுத்தி விட்டு, மந்தைவெளி ரயில் நிலையத்தில் இளைஞர்கள் இறங்கி தப்பிச் சென்றனர். இளைஞர்கள் ரயிலில் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் ரயில்வே காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Theni News:விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்!