"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது - பீகார் வைரல் வீடியோ
அர்ரா: பீகார் மாநிலம், அர்ரா பகுதியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என தேச விரோத கோஷம் எழுப்பி வீடியோ வெளியிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உள்ளூர் பேட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற குஷியில், வீதியில் வலம் வரும் இளைஞர்கள் குழு ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. வீடியோ போலீசார் கவனத்திற்குச் சென்ற நிலையில், வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST