தமிழ்நாடு

tamil nadu

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி!

ETV Bharat / videos

கட்டுப்பாட்டை இழந்த கரும்பு லாரி..! சாலையில் கவிழ்ந்து விழும் சிசிடிவி காட்சிகள்..! - கோம்புபள்ளம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 5:30 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள தாளவாடி மலைக்கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள், லாரிகள் மூலம் திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம், பண்ணாரி பகுதிகளில் இயங்கும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று (அக்.06) தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, கோம்புபள்ளம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை வேகமாக கடந்ததுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த கரும்புகள் முழுவதும் சாலையில் சிதறின. அப்போது சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபர் லாரி சரிவதைக்கண்டு, தப்பி ஓடினார். இருப்பினும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது. மேலும் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான காட்சி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details