தமிழ்நாடு

tamil nadu

அரசு பேருந்துக்குள் குடைபிடித்தவாறு பயணம் செய்த மக்கள்

ETV Bharat / videos

தூத்துக்குடியில் அரசுப் பேருந்துக்குள் கொட்டிய மழை.. பயணிகள் அவதி.. வைரலாகும் வீடியோ! - heavy rain in thoothukudi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 8:48 AM IST

Updated : Dec 18, 2023, 4:42 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அரசு பேருந்தில், குடைபிடித்தபடி பொதுமக்கள் பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில், மழை நீர் அதிக அளவில் வடிந்ததால் பொதுமக்கள் பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கும் அரசு பேருந்தின் பல பகுதிகளில் இருக்கும் துவாரங்களில் இருந்து மழை நீர் வடிந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "மருத்துவமனை போன்ற அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்காக, கோவில்பட்டி வரை செல்ல பயன்படும் அரசு பேருந்தின் உள்ளே மழைநீர் வடிவதால், மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்" எனத் தெரிவித்தனர். 

இதனைச் சீரமைக்க, துறை சார்ந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், மழை நீர் வடியும் அரசு பேருந்தில் பயணிகள் குடைபிடித்துக் கொண்டு பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Dec 18, 2023, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details