இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த அரை அடி நீள பச்சை பாம்பு மீட்பு.. வைரலாகும் வீடியோ! - ஈரோடு பாம்பு பிடி வீரர் யுவராஜ்
Published : Nov 18, 2023, 11:55 AM IST
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் புறநகர் பகுதியான மரப்பாலத்தில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று (நவ.18) காலை, வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அவரது இருசக்கர வாகனத்தில் சாவி போடும் இடத்தில் இருந்து, அரை அடி நீள பச்சை பாம்பு வெளியேறி உள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன், பாம்பு பிடி வீரர் யுவராஜ்-க்கு தகவல் அளித்துள்ளார். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ், பாம்பை லாவகமாக மீட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், மழைக் காலங்களில் கதகதப்பான இடங்களைத் தேடி பாம்பு அடிக்கடி வரும் என்று கூறிய பாம்பு பிடி வீரர் யுவராஜ், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன் பின்னர், இருசக்கர வாகனத்தில் இருந்து மீட்ட அரை நீள பச்சைப் பாம்பை வனத் துறையினரிடம் அவர் ஒப்படைத்தார்.