யானையும் காட்டு மாடுகளும் தண்ணீர் அருந்தும் வீடியோ - kovai viral video
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ஆனைகட்டி மலை அடிவாரப் பகுதியான மாங்கரை, தடாகம் பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் அதிக உள்ள பகுதியாகும். யானைகள், காட்டுமாடுகள், காட்டுபன்றிகள், மான்கள் என பல்வேறு வனவிலங்குகள் அங்கு சுற்றி திரிவது வழக்கம். இந்நிலையில் தடாகம் பள்ளதாக்கு மாங்கரை பகுதியில் உள்ள சிறிய நீர் தேக்கத்தில் யானை மற்றும் காட்டுமாடுகள் தண்ணீர் அருந்தும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST