தமிழ்நாடு

tamil nadu

வீதியில் இருந்த நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை

ETV Bharat / videos

Viral Video - வீதியில் இருந்த நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை - Viral video of Cheetah

By

Published : Feb 24, 2023, 5:03 PM IST

கேரளா:சபரிமலை ஐயப்பன் கோயில் அருகே பம்பை அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் தங்கி, பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வகையில் காவல் துறையினருக்கு மூன்று மாடிகள் கொண்ட விடுதி அங்கு உள்ளது.

இந்த விடுதியில் காவலர்கள் தங்கி இருந்த நிலையில், விடுதியின் அருகேவுள்ள தெருவில் நாய் ஒன்று தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு, அங்கிருந்த காவலர்கள் விடுதிக்கு வெளியே உள்ள கட்டடத்தில் நின்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வெகு நேரமாக சிறுத்தை ஒன்று தெருவில் குரைத்துக் கொண்டிருக்கும் நாயை வேட்டையாடுவதற்காக காத்திருப்பது தெரியவந்தது. இரண்டாவது மாடியில் சிறுத்தை எவ்வாறு ஏறியது? என காவலர்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்சியை பயத்துடன் காவலர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details