தமிழ்நாடு

tamil nadu

இரவில் உலா வரும் கரடி

ETV Bharat / videos

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வரும் கரடி: திக்... திக் வீடியோ காட்சி! - முதுமலைக் காடுகள்

By

Published : Jun 21, 2023, 11:19 AM IST

நீலகிரி மாவட்டத்தில் காட்டு எருமைகள், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி உள்ளிட்டப் பல வகை வனவிலங்குகள் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள சேலாஸ், கெந்தலா, பாரதி நகர், பில்லிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.  

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சேலாஸ் பஜார் பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை இரவு பணியில் இருந்த காவல்துறையினர் வீடியோ பதிவு செய்தனர். அதேபோல் பாரதி நகர் பகுதியில் பகல் வேளையில் சாலையில் உலா வந்த கரடியை, அப்பகுதி சிறுவர்கள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.  

கடந்த சில மாதங்கள் முன்பு, பில்லி மலைப் பகுதியில் கரடி ஒன்றினை குன்னூர் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் விட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, கடந்த சில நாட்களாக சேலாஸ், கெந்தலா, பாரதி நகர் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளையும் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details